--- --:--:-- --

தூத்துக்குடியில் 21 ஆம் தேதி முதலமைச்சர் ஆய்வு..!

2

தூத்துக்குடியில் 29ஆம் தேதி முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை நாளை மறுநாள் ஆய்வு செய்கிறார்.

 

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் வரலாறு காணாத வகையில் மழை கொட்டித்தீர்த்துள்ளது. வானிலை ஆய்வு மையமே கணிக்க முடியாத அளவுக்கு காயல்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை 95 செ.மீ., மழையும், திங்கட்கிழமை 21 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

 

அதாவது, காயல்பட்டினத்தில் 2 நாட்களில் மட்டும் 116 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதனால், காயல்பட்டினத்தில் திரும்பும் திசையெங்கும் தண்ணீராகவே காட்சியளிக்கிறது.

 

சாலைகள், தெருக்கள், சிறிய சந்துகளில் கூட தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதேபோல், தூத்துக்குடியின் பல்வேறு இடங்களும், ஏராளமான கிராமங்களும் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன.

 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 6 ஆம் தேதி பணி நாளாக செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.மேலும் அத்தியாவசிய சேவைகள் வழங்கும் துறை அலுவலர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.

 

அதாவது வருவாய், காவல், தீயணைப்பு, உள்ளாட்சி, குடிதண்ணீர், பால், எரிபொருள், உணவக பணியாளர்கள் மற்றும் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் விடுமுறை பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon