சட்டென பிரேக் போட்டதால் பேருந்தில் நிகழ்ந்த விபத்து..!
செங்கல்பட்டில் அரசு பேருந்து ஓட்டுனர் சாமர்த்தியமாக பிரேக்கை நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர். செங்கல்பட்டு மாவட்டம் சாத்தனூர் செங்கல்பட்டு சென்று அரசு பேருந்து ஒன்று 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென பிரேக் பிடித்ததால் அரசு பேருந்து ஓட்டுனர் விபத்தை ஏற்படுத்தாமல் தவிர்க்க சாலையின் ஓரத்தில் மோதி பேருந்தை சாமர்த்தியமாக நிறுத்தினார்.
இந்த விபத்தில் இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





