--- --:--:-- --

அமைச்சர் பொன்முடிக்கு வெளியான தீர்ப்பு.. காரில் இருந்த கொடி அகற்றம்..!

9

குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் தகுதி இழப்பு ஆவாரா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8 ஒன்றாவது பிரிவின்படி சிறை தண்டனை இல்லாமல் குறைந்தபட்ச அபராதம் விதித்தாலே தகுதி இழப்பு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

லஞ்ச ஒழிப்பு துறையின் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அமைச்சர் பொன்முடியின் காரில் இருந்த தேசியக்கொடி திடீரென அகற்றப்பட்டுள்ளது.

 

வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. தண்டனை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இந்த நடைமுறை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மக்கள் பிரதிநிதி 6 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட முடியாது. தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்தால் பதவியில் நீடிக்க முடியாது. இந்த தீர்ப்பின் காரணமாக பொன்முடி பதவியில் நீடிக்கும் தகுதியை இழப்பாரா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon