முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தான் பெரும் பாதிப்பு : ஈபிஎஸ்
திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் காரணத்தால் தான் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
திருநெல்வேலி பகுதிகளில் நிவாரண பொருட்களை வழங்கிய பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார். அதிகாரிகள் உதவ முன் வரவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருவதாக வேதனை தெரிவித்தார். அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





