ஆபத்தான பாலத்தில் பயணிக்கும் மக்கள்..!
திருவள்ளூர் மாவட்டம் குப்பம் கண்டிகையில் கொசக்தலை ஆற்றின் தரை பாலம் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் மாற்று பாதைக்கு சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம் சுத்தி செல்கின்றனர்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வெள்ளத்தினால் பாலம் கடுமையாக சேதமடைந்துள்ளது. எனினும் இரு சக்கர வாகனத்தில் ஆபத்துடன் பாலத்தை கடந்து வருவதால் புதிய பாலம் கட்டுவதற்கு அந்த பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





