4 டன் வாழைத்தார்களை அனுப்பி வைத்த விவசாயி..!
புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் வகையில் நான்கு டன் வாழைத்தார்களை சென்னைக்கு அனுப்பிய தஞ்சை விவசாயி ஒருவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்தந்த மாவட்ட பொது மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வடுககுடியை சேர்ந்த வாழை விவசாயி மதியழகன் என்பவர் நான்கு டன் வாழைத்தார்களே நிவாரண உதவியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.
மேலும் 300 பிஸ்கட் பாக்கெட்டுகளையும் வழங்கினார். இந்த பொருட்கள் அனைத்தும் தஞ்சையில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





