வானத்தை போல சீரியல் புகழ் நடிகை ஸ்வேதாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது..!
தமிழ் சின்னத்திரை எத்தனையோ கலைஞர்களுக்கு பெரிய வரவேற்பு கொடுத்துள்ளது. அதுவும் இந்த காலத்தில் ஏகப்பட்ட கலைஞர்கள் நடிக்க வருகின்றனர், சீரியல்களும் நிறைய ஒளிபரப்பாகி வருகின்றன.
ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் காலை ஆரம்பித்து இரவு வரை தொடர்கள் ஒளிபரப்பாகிறது.அப்படி சன் டிவியின் வானத்தை போல என்ற தொடர் மூலம் பெரிய ரீச் பெற்றவர் நடிகை ஸ்வேதா.வானத்தை போல தொடர் ஆரம்பத்தில் நடிக்க கமிட்டானவர் பின் சில காரணங்களால் தொடரை விட்டு விலகிவிட்டார்.
இந்த நிலையில் ஸ்வேதாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அவர் தனது வருங்கால கணவருடன் நிச்சயதார்த்தம் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக ரசிகர்கள் இந்த புதிய ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




