--- --:--:-- --

நடிகர் விஜய்யை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்..!

8

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கத்ரீனா கைஃப். இவர் நடிப்பில் சமீபத்தில் தான் டைகர் 3 திரைப்படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக மெர்ரி கிறிஸ்துமஸ் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி.

 

இந்நிலையில், சமீபத்தில் Jeddah-வில் நடந்த திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நடிகை கத்ரீனா கைஃப், மெர்ரி கிறிஸ்துமஸ் படம் குறித்தும் விஜய் சேதுபதியை பற்றியும் பேசினார்.

 

இதில் “நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அது மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் மூலம் நிறைவேறிவிட்டது. மெர்ரி கிறிஸ்துமஸ் ஒரு அற்புதமான திரைப்படம். நான் இதுவரை நடித்த படங்களில், இப்படம் தான் கஷ்டமாக இருந்தது. மேலும் விஜய் சேதுபதியுடன் நடிக்கும்போது சவாலாக இருந்தது”.

 

“ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இரண்டு மொழிகளுக்கும் தனித்தனியாக தான் எடுத்தோம். தமிழ் பாதிப்புக்காக நானே தமிழ் பேசி நடித்தேன். இது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. நடிகர் விஜய் சேதுபதி ஒரு அற்புதமான நபர்” என பேசியுள்ளார். கத்ரீனா கைப் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon