திருப்பதியில் ஜட்டி கொள்ளையர்களால் மக்கள் அச்சம்..!
திருப்பதியில் ஜட்டி அணிந்தவாறு செல்லும் இளைஞர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட முயன்றதாகவும் பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் கார் ஷோரூமில் திருட முயற்சித்துள்ளனர்.
இதையடுத்து சிசிடிவி காட்சிகளை பரிசோதித்த காவலர்கள் திகைத்துப் போய் ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள போலீசார் மிகவும் ஆபத்தான ஜட்டி கொள்ளையர்கள் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குறிப்பாக புறநகர் பகுதியில் உள்ள வீடுகள், தனியாக இருக்கும் வீடுகள் ஆகியவற்றில் வசிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் யாராவது நடமாடினால் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





