இந்த வார எலிமினேஷன் இவர்தான்?
பிக் பாஸ் 7ம் சீசனில் வித்தியாசமான பல விஷயங்களை செய்து வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் ஐந்து வைல்டு கார்டு போட்டியாளர்களை களமிறக்க இருக்கின்றனர்.
அந்த ஐந்து பேர் யார் என்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்க, இந்த வாரம் எலிமினேட் ஆக போவது யார் என்றும் கேள்வி இருக்கிறது.
இந்த வாரம் வினுஷா எலிமினேட் ஆக அதிகம் வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வினுஷா பிக் பாஸ் வீட்டில் இருப்பதே தெரியாத அளவுக்கு தான் இருக்கிறார் என ஷோ ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வினுஷா கன்டென்ட் கொடுப்பதில்லை என பிக் பாஸே ஒருமுறை அவரை சிறைக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




