--- --:--:-- --

ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு சிக்கிக் கொண்ட இளைஞர்..!

5

விருதுநகர் அருகே சாஸ்தா கோயில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட இளைஞரை வனத்துறையினர் கயிறு மூலம் மீட்டனர்.

 

காஜாபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள சாஸ்தா கோயில் ஆற்றுக்கு விடுமுறை தினம் என்பதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

 

அப்பொழுது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் வெள்ளப்பெருக்கு சிக்கிக்கொண்டார். இளைஞரை வனத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சாஸ்தா கோயிலில் குளித்த வனத்துறையினர் அனுமதி மறுத்ததால் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon