--- --:--:-- --

கல்லூரி விடுதியில் ஊசி போட்டு மாணவி தற்கொலை.. சிக்கிய கடிதம்..!

9

குமரி மாவட்டம் குலசேகரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில் முதுநிலை மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் தூத்துக்குடியை சேர்ந்த சிவகுமார் என்பவரின் மகள் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்தார். கல்லூரிக்கு செல்லாமல் விடுதி அறையில் தங்கியிருந்த அவர் மன அழுத்தம் காரணமாக ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் தனது முடிவுக்கு மூன்று பேராசிரியர்கள் காரணம் என்று எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. குலசேகரன் காவல் நிலைய போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

இதற்கு இடையே மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் வெளியாகி உள்ளதால் உடற்கூறு ஆய்வுக்கு பின் முழுமையான விவரம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon