--- --:--:-- --

கோவத்தில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை..!

7

கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய இளம் பெண்ணுக்கு தங்க இடம் கொடுப்பதாக கூறி இரண்டு நாட்கள் தனி வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கன்னியாகுமரியை சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் புதுச்சேரி திப்புராயப்பேட்டையில் உள்ள அவரது சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சகோதரியுடன் ஏற்பட்ட தகராறு கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய அவர் ஆட்டோ ஒன்றில் ஏறி பேருந்து நிலையம் வரை வந்துள்ளார்.

 

பின்னர் பணம் இல்லாமல் செய்வதறியாது என்று அவரிடம் மூன்று பேர் நைசாக பேச்சு கொடுத்து தங்குவதற்கு இடம் கொடுப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளனர். நம்பி சென்ற அவரை இரண்டு நாட்களாக ஒரு தனி வீட்டில் அடைத்து வைத்து மூன்று பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 

அங்கிருந்து ஒரு வழியாக தப்பித்த இளம் பெண் நடந்தவற்றை அருகில் உள்ள கடைக்காரரிடம் தெரிவிக்கவே விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து முதலியார் பேட்டை போலீசார் சாதிக் பாஷா, தினேஷ், அரவிந்தன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே பேருந்து நிலையம் வரை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுனரும் பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த இளம் பெண் தெரிவித்த நிலையில் அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon