இன்று எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம்..!

நாடாளுமன்றத்தில் தேர்தல் கூட்டணியை இறுதி செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்ல உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிர படுத்தியுள்ளன.

 

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் வலுவான கூட்டணி அமைத்துள்ளன. பாஜக தலைமைதான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது.

 

அதிமுக பொது செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்ல உள்ளார். டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நாட்டா மற்றும் அமித்ஷாவை சந்திப்பார். மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.