ஒரே அடியில் நாக் அவுட்.. தேசிய அளவிலான கிக் பாக்சிங்கில் தங்கப்பதக்கம் வென்ற 7 வயது சிறுமி..!

தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இரண்டாம் வகுப்பு மாணவிக்கு விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

ஜார்கண்ட் மாநிலம் ராமச்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பல பகுதிகளில் இருந்து வந்த மாணவ மாணவிகள் பங்கேற்றத்தில் ஓசூரை சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவி தங்க பதக்கம் வென்றார். மாணவியை விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.