உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு…!

லகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக 15 பேர் கொண்ட இந்திய அணி, இலங்கையில் இன்று பிற்பகல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

 

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது.இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அனைத்து நாடுகளும் தங்களது அணியை அறிவிக்க வேண்டும் என்பதால் அந்தக் கெடு இன்றுடன் முடிவடைகிறது.

 

பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஆகியோர் நீண்ட ஆலோசனைக்குப் பின் 15 பேர் கொண்ட அணியை ஏற்கனவே தயார் செய்து விட்டதாக கூறப்படுகிறது.

 

இதில், ரோஹித் தலைமையில், ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா இடம்பெறுவது உறுதியாகும்.மேலும், காயத்தில் இருந்து முழு உடல் தகுதி பெற்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான லோகேஷ் ராகுல், உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. மேலும் இரண்டாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இஷன் கிஷன் இடம்பெறலாம். ராகுல் வருகையால் சஞ்சு சாம்சன் இடம்பெற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.