--- --:--:-- --

இந்தியாவில் ரூ.100 நாணயம் வெளியீடு..!

8

றைந்த ஆந்திரா முன்னாள் முதல்வரும் பழம்பெரும் நடிகருமான என்டி ராமராவ் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவம் பொதித்த நூறு ரூபாய் நாணயத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று வெளியிட்டார்.

 

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் 1923 மே 28ல் பிறந்தவர் என்டி ராமராவ், தெலுங்கில் 300க்கும் மேற்பட்ட படங்களை நடித்த இவர் 1982ல் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்துள்ளார்.

 

இந்நிலையில் ராமாராவின் நூற்றாண்டு விழாவையொட்டி தலைநகர் புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் விழா நடந்தது. இதில் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆகியோர் பங்கேற்றனர்.

 

அப்பொழுது ராமாராவின் உருவம் பொதித்த நூறு ரூபாய் நாணயத்தை ஜனாதிபதி திரௌபதி வெளியிட்டார். நாணயத்தின் ஒரு புறம் அசோக சக்கரம், மறுபுறம் என்டி ராமராவ் உருவத்துடன் நாணயம் வெளியிடப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon