பெண்ணின் மூளையிலிருந்து எடுக்கப்பட்ட 8 சென்டிமீட்டர் நீளமுள்ள புழு..!
உலகிலேயே முதன்முறையாக ஆஸ்திரேலிய பெண் ஒருவரின் மூளையிலிருந்து 8 சென்டிமீட்டர் நீளமான உயிருள்ள புழு கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது.
64 வயதான பெண் ஒருவர் நிமோனியா, வயிற்று வலி போன்ற பல உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அந்த பெண்ணின் மூளையில் எட்டு சென்டிமீட்டர் நீளமான உயிருள்ள ஒட்டுண்ணி புழுவை கண்டுபிடித்தனர்.
அந்தப் பெண் தனது குடியிருப்பு அருகில் இருந்த கீரைகளை சேகரித்து எடுத்த பொழுது ஒட்டுண்ணியாக முட்டை உடலுக்குள் நுழைந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





