--- --:--:-- --

காதலிக்கும் போதே சந்தேகம் அடைந்து காதலியை குக்கரால் அடித்து கொன்ற காதலன்..!

4

பெங்களூருவில் குக்கரால் காதலியை அடித்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர். கேரளாவை சேர்ந்த காதலர்களான வைஷ்ணவி மற்றும் தேவியாகியோர் ஒன்றாக தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.

 

வேறு ஒரு நபருடன் தேவி நெருக்கமாக பேசி வந்ததாக சந்தேகித்த வைஷ்ணவ் அது குறித்து தேவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தகராறு முற்றி அங்கிருந்த குக்கரால் வைஷ்ணவி சரமாரியாக தாக்கியதில் தேவி உயிரிழந்ததாக தெரிகிறது.

 

வைஷ்ணவ் தலைமறைவான நிலையில் வீட்டில் சடலமாக தேவி கிடந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். செல்போன் சிக்னல் உதவியுடன் தலைமறைவாக இருந்த வைஷ்ணவை போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon