சதுரகிரி மலையில் இரண்டாவது நாளாக எரியும் காட்டுத்தீ..!
சதுரகிரி மலையில் உள்ள நவலூத்து பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ இன்னும் கட்டுக்குள் வரவில்லை. ஆடி அமாவாசையை ஒட்டி ஏராளமான பக்தர்கள், சதுரகிரி மலை கோவில் தரிசனம் செய்ய சென்றனர்.
3000 பக்தர்களில் சுமார் 2000 பேர் மீட்கப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் மலைக்கோயிலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 30க்கும் அதிகமான வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். டீ கட்டுக்குள் வராததால் சதுரகிரி மலையில் இருந்து கீழே இறங்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





