இருசக்கர வாகனம் வேன் மோதி விபத்து.. கல்லூரி மாணவர் படுகாயம்..!
வேலூர் அருகே இருசக்கர வாகனமும், வேனும் மோதிக்கொண்ட விபத்து தொடர்பான சிசிடிவி கேமரா கட்சிகள் வெளியாகி இருக்கின்றன, குடியாத்தம் அருகே உள்ள அரசு கல்லூரியில் படித்த ஹரிதாஸ் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தவன் எதிர்பாராத விதமாக ஹரிதாஸ் பயணித்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் கல்லூரி மாணவரான ஹரிதாஸ் படுகாயம் அடைந்தார். குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





