--- --:--:-- --

திடீரென வெடித்த தீயணைப்பான்..30 அடி உயரத்திற்கு வீசப்பட்ட பள்ளி மாணவர்..!

7

தாய்லாந்தில் தீ பாதுகாப்பு ஒத்திகையின் பொழுது தீயணைப்பு கருவி வெடித்து சிதறியதில் மாணவர் உயிரிழந்தார். தலைநகர் பாங்காங்கில் உள்ள பள்ளி ஒன்றில் தீ பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

 

அப்பொழுது தீயணைப்பு கருவிகளை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கிக் காட்டப்பட்டது. அதே நேரத்தில் பல தீயணைப்பு கருவிகள் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டன. அப்பொழுது ஒரு கருவி திடீரென வெடித்து சிதறியது.

 

இதில் அருகில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவன் ஒருவன் 30 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி உயிரிழந்தான். மேலும் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது.

 

வாயு நிரப்பப்பட்ட தீயணைப்பு சிலிண்டர் வெகு நேரம் சூரிய வெப்பத்திலிருந்து அழுத்தம் அதிகரித்து வெடித்து சிதறி இருப்பதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon