--- --:--:-- --

ஆற்றில் உயிருக்கு போராடிய பெண்ணை காப்பாற்றிய இளைஞருக்கு 35 லட்சம் பரிசு..!

8

சீனாவில் நீரில் மூழ்கும் பெண்ணை காப்பாற்ற பாலத்திலிருந்து குதித்த உணவு டெலிவரி ஏஜென்ட்க்கு கிட்டத்தட்ட 35 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

 

சீனாவில் உணவு டெலிவரி செய்யும் ஏஜென்டாக வேலை புரியும் இளைஞர் நீரில் மூழ்கிய பெண்ணை காப்பாற்ற பாலத்திலிருந்து குதித்ததற்காக ஹீரோவாக பார்க்கப்படுகிறார். வாடிக்கையாளருக்கு உணவு டெலிவரி செய்யும் பொழுது ஆற்றில் பெண் ஒருவர் உயிருக்கு போராடுவதை அவர் பார்த்துள்ளார்.

 

பாலத்தின் தடுப்பு கம்பிகளை தாண்டி விளிம்பிலிருந்து தண்ணீரில் குதித்து உயிருக்காக போராடிக் கொண்டிருந்த பெண்ணை நோக்கி நீந்தி சென்று அவரை அருகில் இருந்த ஏரிக்கு அழைத்துச் சென்றார்.

 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரோ உயிர்காக்கும் படகுகளில் 10 நிமிடங்களில் மீட்பு பணியை முடித்தனர். இப்போது அந்த பெண் உயிர் பிழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon