வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருள்.. வேலூர் அருகே பரபரப்பு..!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. இரவு 7 மணி அளவில் வெடித்த பலூன் உடன் அந்த மர்ம பொருள் கீழே விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் அந்த பலூனை கைப்பற்றி அதிலிருந்து முகவரியை தொடர்பு கொண்ட பொழுது அதில் வானிலை ஆராய்ச்சி மீட்டருக்கு சொந்தமான கருவி என்றும் அதனால் வாய்ப்பு எதுவும் இல்லை எனவும் தெரிய வந்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





