தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை அகற்ற வேண்டும்..!
தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.இரவியை அகற்றக் கோரி ம.தி.மு.க கையெழுத்து இயக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது. மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 29-வது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை அகற்றக் கோரும் கையெழுத்து இயக்கத்தை ம.தி.மு.க 20.06.2023 அன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் தொடங்கி நடத்துகிறது.
தலைநகர் சென்னையில், தலைமைக் கழகம் அமைந்துள்ள தாயகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைக்கிறார்.
அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் கோவையிலும், பொருளாளர் மு.செந்திலதிபன் கடலூரிலும், கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தென்சென்னையிலும், துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா காஞ்சிபுரத்திலும், துணைப் பொதுச்செயலாளர் ஆ.கு.மணி விழுப்புரத்திலும், துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன் திருநெல்வேலியிலும், துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை முருகன் குடந்தையிலும், துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா சேக்முகமது திருச்சியிலும் கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைக்கிறார்கள்.
கழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டக் கழக செயலாளர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி, மக்கள் இயக்கமாக நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




