ஜப்பான் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்..!
ஜப்பானின் ஒசாகா மாகாணத்திற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒசாகா மாநிலத்தில் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு வழிகாட்டு நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ரூ.83 கோடி முதலீட்டில் ஏர்பேக் இன்பிலேட்டர் தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





