--- --:--:-- --

விராட் கோலிக்கு ரூ.1கோடி அபராதம்..!

8

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ, பெங்களூர் அணிகள் மோதிய ஆட்டம் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் முடிவடைந்தது. ஆர்சிபி அணி 126 ரன்கள் தான் முதலில் பேட்டிங் செய்து அடித்தது. இதனால் இந்த மேட்ச் மொக்கையாக தான் இருக்கும் என்று நீங்கள் தூங்கி இருந்தால் பரபரப்பான ஆட்டத்தை நீங்கள் மிஸ் செய்து இருப்பீர்கள்.

 

ஏனென்றால் லக்னோ அணி, இந்த ஆட்டத்தில் 108 ரன்களில் தோல்வியில் தழுவியது. மேலும் ஆட்டத்தின் முடிவில் விராட் கோலியும், கம்பீரும் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆட்டம் முடிந்ததும் கைகுலுக்கும் போது நவீன் உல் ஹ்க் விராட் கோலியிடம் ஏதோ பேசினார்.

 

அதற்கு விராட் கோலி பதிலடி கொடுக்க என சண்டை தொடங்கியது. பிறகு கெயில் மேயர்ஸ் விராட் கோலி இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததை கண்ட கம்பீர் அவரை அழைத்துச் சென்றார். இதனால் கடுப்பான விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை அடுத்து இருவரும் மோதிக் கொள்ளும் நிலைக்கு சென்றனர்.

 

அப்போது அங்கு இருந்த சக அணி வீரர்கள் இருவரையும் விலக்கி விட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது ஐபிஎல் நன்னடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று கோலியும் கம்பீரும் தங்கள் தவறை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இதனால் விராட் கோலிக்கு 100% போட்டியின் ஊதியத்திலிருந்து அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

 

இதேபோன்று கம்பிருக்கும் போட்டிக்கான ஊதியத்திலிருந்து 100% அபராதமும், நவீன் உல் ஹக்கிற்கு போட்டிக்கான ஊதியத்திலிருந்து 50 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விராட் கோலி நேற்று செய்த தவறால் ஒரு கோடியே 7 லட்சம் ரூபாயை அபராதமாக கட்ட நேரிடும். கம்பீர் வெறும் 25 லட்சம் மட்டுமே அபாரமாக செலுத்த நேரிடும்.

 

நவீன் உல் ஹக்கின் ஊதியம் மிகவும் குறைவு என்பதால் அவர் ஒரு லட்சத்து 79 ஆயிரம் ரூபாயை அபராதமாக கட்ட உள்ளார். விராட் கோலி ஏற்கனவே சிஎஸ்கே போட்டியின் போது தகாத வார்த்தையில் திட்டியதற்காக அபராதம் கட்டியிருக்கிறார். இளைஞர்களும் சிறுவர்களும் விராட் கோலியை பார்த்து தான் வளர்கின்றனர். ஆனால் அவர் மற்றவர்களுக்கு முன்உதாரணமாக இல்லாமல் தவறான வழிகாட்டியாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon