ஜெயலலிதாவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு தான் அங்கீகாரம் – திருமாவளவன் வாழ்த்து
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘விபி சிங்கிற்க்கு தமிழ்நாட்டில் சிலை வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வரவேற்கிறோம். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்திற்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க மண்டல் பரிந்துரையை ஏற்று சமூக நீதியை நிலை நாட்டியவர் விபி சிங். ஆட்சி கலைக்கப்படும் என்றும் தெரிந்தும் சமூக நீதியை நிலைநாட்டி உள்ளார்.
வரும் 22-ம் தேதி ஊத்தங்கரையில் ஆணவக் கொலைதடுப்புச் சட்டம் நிறைவேற்ற எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அந்த ஆணவப் படுகொலையில் தனது மகனையும் தனது தாய் உட்பட 3 கொலை செய்ய முயற்சித்து இருவர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். தலித் பெண் அனுசுயா சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அரசு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும்.
சனாதான சக்திகளின் அரசியல் தலையீட்டைத் தடுக்க வேண்டும். சாதிய மதவெறி உள்ளதையும் தடுக்க வேண்டும். கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களுக்கு தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கின்றது. சமூக நீதியின் வரலாற்றில் தனித் தீர்மானம் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.
ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் ஒதுக்கீடுகளும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி. கடந்த 14ஆம் தேதி பெரிய குளத்தில் பல்வேறு கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பிறந்தநாள் விழா கொண்டாடினர்.
இதில் பாஜகவினர் ஊடுருவி வன்முறையை தூண்டி விட்டு காவல்துறையினருக்கும் தலித் மக்களுக்கும் மோதலை உருவாக்கி உள்ளனர். இதில் 70க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதியப்பட்டு உள்ளது. தலித் மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.\
கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களுக்கு தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டதை எதிர்த்து நான்கு பாஜகவினர் நடப்பு செய்துள்ளனர். இதுதான் பாஜகவின் கொள்கை. பௌத்தம் சமணம் ஆகிய ஆகிய மதங்களில் மாறினால் ஆதரிப்பார்கள். ஆனால் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் மீது எதிர்ப்பை காட்டுவார்கள். கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கும் வன்கொடுமைகள் நடந்தேறி வருகின்றன. பாஜகவின் போக்கை விசிக வன்மையாக கண்டிக்கின்றது.
\
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவில் எங்கள் கூட்டணி தொடரும். எங்களது கூட்டணி வலுவாக உள்ளது. அகில இந்திய அளவில் பிற மாநிலங்களிலும் திமுக கூட்டணி உருவாக வேண்டும். அதனால் தான் சனாதான பாஜகவை வீழ்த்த முடியும். சமூக நீதியை வலுப்படுத்த முடியும். அதிமுகவில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆனதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதாவிற்கு பிறகு அங்கீகாரம் கிடைத்தது எடப்பாடி பழனிச்சாமிக்கு தான்.
கர்நாடகாவில் நடைபெறும் தேர்தலுக்கு காங்கிரசிற்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் பரப்புரை செய்யும். நானும் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவேன். தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஆளுநர் ரவி தனது பதவிக்கான பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். மாநில அரசு கொண்டுவரும் தீர்மானங்களை முறையாக நிறைவேற்ற வழிமுறை செய்திட வேண்டும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




