அரசினர் கூர்நோக்கி இல்லத்தில் இருந்து சிறார்கள் தப்பி செல்ல முயற்சி..!
வேலூர் அரசினர் கூர்நோக்கு இடத்திலிருந்து தப்பி செல்ல முயன்ற சிறார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூரில் ஆற்காடு சாலையில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்திலிருந்து 5 சிறார்கள் தப்பிச் செல்ல முயன்றனர்.
இருப்பினும் அவர்களை காவல் துறையினர் தடுத்து சென்று பிடித்து மீண்டும் கூர்நோக்கு விட்டுள்ளனர். கூர்நோக்கி இல்லத்தில் இருந்த பொருட்களை ஏழு சிறார்கள் சேதப்படுத்தியதாக தெரிகிறது. இந்த சம்பவங்களை தொடர்ந்து 12 சிறார்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





