ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீ பிடித்ததில் பெண் அதிகாரி உட்பட 4 பேர் பலி..!
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீ பிடித்ததில் பெண் அதிகாரி உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்கா நாடான கொலம்பியா பகுதியில் ராணுவ தளவாடங்களில் வினியோகம் செய்யும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர் ஈடுபட்டது.
அதில் ஒரு பெண் உட்பட நான்கு ராணுவ அதிகாரிகள் இருந்தனர். அப்பொழுது திடீரென அந்த ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. அதிலிருந்த நான்கு பேரும் உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டர் நடுவானிலிருந்து கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு அந்நாட்டின் அதிபர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





