--- --:--:-- --

மருமகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாமனார் கைது..!

3

போடிநாயக்கனூரில் மருமகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாமனார் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த வெங்கடேசன் சென்னையில் பணியாற்றி வரும் நிலையில் அவருடைய மனைவி சௌமியா தனது மாமனார் மாமியாருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

 

சௌமியா தனது மாமனார் மீது மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில் சௌமியா தனது உறவினர்களுடன் சேர்ந்து மீண்டும் புகார் அளித்தார்.

 

இதனைத் தொடர்ந்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் உடந்தையாக இருந்ததாக கூறி சுப்பையனின் மனைவி விஜயலட்சுமி மற்றும் வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon