விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ராணுவ வீரர்..!
விமானத்தை தவறவிட்டதால் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ராணுவ வீரர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார். ஹைதராபாத்திலிருந்து சென்னை செல்ல விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஹைதராபாத் விமான நிலையத்திற்கு மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து போலீசார் விசாரித்த பொழுது விமானத்தை தவறவிட்ட ராணுவ வீரர் ஒருவர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. சென்னைக்கு புறப்பட இருந்த விமானத்தில் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





