--- --:--:-- --

வீட்டுக்குள் புகுந்த ஆறடி நீள சாரைப்பாம்பு..!

9

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் வீட்டிற்குள் புகுந்து ஆறடி நீள சாரை பாம்பை தீயணைப்புத் துறையினர் லாவகமாக பிடித்தனர். கந்தர்வகோட்டை பகுதியில் வசித்து வரும் ராமு என்பவர் தனது வீட்டின் மேற்பகுதியில் ஆறடி நீள சாரை பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் வீட்டில் புகுந்து ஆறடி நீள சாரை பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon