நேபாள விபத்தில் விமானத்தின் கருப்பு பெட்டி சிக்கியது..!
நேபாளத்தின் புகாராவி விமான நிலையத்தின் அருகே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 72 பேருடன் ஏர்லைன்ஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பொக்காரா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற பொழுது செட்டி நதிகரையில் உள்ள வனப்பகுதியில் தீ பற்றியது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த ஐந்து இந்தியர்கள் உட்பட 68 பேர் பலியாகினர்.
இந்த நிலையில் தேடுதலுக்கு பின் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டதாகவும் அது சேதமடையாமல் நல்ல நிலையில் இருப்பதாகவும் காத்மாண்டு விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். ஆய்வுக்கு பின் விமான விபத்துக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





