வேண்டுமென்றே கொரோனாவை வரவழைத்துக் கொண்ட பெண்..!
சீனாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரபல சீன பாடகி தனக்குத்தானே கொரோனா வைரஸ் பாதிப்பை வரவழைத்துக் கொண்டதாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
38 வயதான பெண் சீனாவின் பல்வேறு மேடைகளில் பாடியுள்ளார். இவரது சமூக வலைதளத்தில் 43 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கொரோனாவுக்கு தயாராகி வருவதாக தெரிவித்தார். அதன் பின் மறுநாள் தனக்கான அனைத்து கொரோனா அறிகுறிகளும் மறைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இப்படி ஒரு பொறுப்பில்லாத செயலை செய்ததாக சீன பாடகிக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இதையடுத்து அவரது முந்தைய பதிவுகளை நீக்கிவிட்டு அதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





