--- --:--:-- --

ஆ.ராசாவின் பினாமி சொத்துக்கள் முடக்கம் -அமலாக்கத்துறை

3

திமுக எம்.பி ராசாவின் வினாமி நிறுவன சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தி.மு.க. எம்பி. ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

 

இவர் மத்திய அமைச்சராக இருந்த போது ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற்று தர லஞ்சமாக பெற்ற பணத்தை பினாமி பெயரில் கோவையில் 45 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ. 55 கோடி என கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து சொத்துக்களை முடக்கி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon