--- --:--:-- --

நம்ம பள்ளி திட்டத்தினை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்..!

1

அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம பள்ளி என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் முன்னாள் மாணவர்கள் தங்கள் படித்த பள்ளிக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர்.

 

நம்ம பள்ளி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து அதற்கான இணையதளத்தையும் அறிமுகம் செய்து வைக்கிறார்.

 

இந்த நம்ம பள்ளி திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்று தற்பொழுது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் தொழிலதிபர்கள், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்கள் மூலம் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை இந்த திட்டத்தின் மூலம் மேம்படுத்தலாம். இந்த திட்டத்தில் எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதி உதவி வழங்கலாம்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon