--- --:--:-- --

ரூ.16 லட்சம் இழந்த பெண் தந்தைக்கு பயந்து கிட்னியை விற்க முயன்றதால் பரபரப்பு..!

19

ஆந்திராவில் 80 ஆயிரம் ரூபாய் கடனை அடைக்க சிறுநீரகத்தை 6 கோடி ரூபாய்க்கு விற்க வந்த இளம்பெண் ஆறு கோடி ரூபாயை பெற ஆன்லைனில் 16 லட்சம் ரூபாய் இழந்த பரிதாபம் இளம்பெண்ணுக்கு நடந்துள்ளது.

 

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் யாமினி தனது தந்தையின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி வந்துள்ளார். தந்தையின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து செலவு செய்துள்ளார்.

 

ஒரு கட்டத்தில் செலவு செய்த 80,000 பணம் எங்கே என தந்தை கேட்டால் மாட்டிக்கொள்வோமே என்று நினைத்த அந்தப் பெண் எப்படியாவது பணத்தை தந்தையின் வங்கி கணக்கில் செலுத்த முடிவு செய்துள்ளார். அப்பொழுது இணையத்தில் விளம்பரம் ஒன்று அவரின் கண்ணில் பட்டிருக்கிறது.

 

சிறுநீரக நன்கொடை தொடர்பான விளம்பரம், கிட்னி கொடுத்தால் ஆறு கோடி ரூபாய் பணம் என்று வந்ததால் அந்த விளம்பரத்தை கிளிக் செய்து இருக்கிறார். அதில் போலி வங்கி கணக்கை உருவாக்கி மூன்று கோடி ரூபாயை டெபாசிட் செய்துள்ளது.

 

அந்த கும்பல் பின்னர் மூன்று கோடி ரூபாய் பணம் எடுக்க பல்வேறு விதிமுறைகள் இருப்பதாகவும் கூறியுள்ளது. மூன்று கோடி தான் வரப்போகிறது என நினைத்த யாமினி தனது தந்தை வீடு கட்டுவதற்காக வங்கி கணக்கில் வைத்திருந்த 20 லட்ச ரூபாயில் 16 லட்ச ரூபாயை மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

 

இந்த நிலையில் தன் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என தந்தை சரி பார்க்க வெறும் 4 லட்ச ரூபாய் இருப்பதை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார். இதன்பிறகு இந்த விவகாரம் தந்தைக்கு வந்துள்ளது. போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon