திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று கனவழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வங்கு கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாகவும் தெற்கு ஆந்திரா பகுதியில் நடுவராகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதன் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த நான்கு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு குறைந்தபட்சம் 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.