சீரியலில் எண்ட்ரீ கொடுத்துள்ள பிக்பாஸ் ஜுலி..!

பிக்பாஸ் முதல் சீசன் மூலம் தமிழக மக்களிடம் பிரபலம் ஆனவர் ஜுலி. இந்நிகழ்ச்சிக்கு முன் ஜல்லிக்கட்டு பேராட்டத்தில் அவர் பங்கேற்பு பார்த்து வீர தமிழச்சி என மக்கள் கொண்டாடினார்கள். ஆனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அந்த பெயரை கெடுத்துக் கொண்டார் என்று தான் கூற வேண்டும்.

 

பின் பிக்பாஸ் நிகழ்ச்சியால் நிறைய பிரச்சனைகளை சந்தித்த ஜுலி மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் பேராதரவை பெற்றார்.

 

நிறைய படங்கள் கமிட்டாகி நடிக்கிறாரோ இல்லையோ அதிக போட்டோ ஷுட்கள் நடத்துகிறார்.அவ்வப்போது சீரியல்களில் சிறப்பு தோற்றத்தில் தலைகாட்டி வந்த ஜுலி இப்போது நிஜமாகவே ஒரு தொடரில் கமிட்டாகி இருப்பதாக தெரிகிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கன்னத்தில் முத்தமிட்டாள் தொடரில் தான் ஜுலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.

 

சீரியலில் அவரது எண்ட்ரிக்கான புரொமோ தற்போது வெளியாக அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.