--- --:--:-- --

500 ரூபாய்க்கு 2 தங்க நாணயம் எனக்கூறி மோசடி..!

4

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் தீபாவளி பண்டு நடத்தி பணம் மோசடி செய்த நபரை கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

மானாமதுரையை சேர்ந்த ஜெகஜோதி அவரது ஏஜென்சி மூலம் தீபாவளி பண்டு நடத்தி மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் நான்கு தங்க நாணயமும், 500 செலுத்தினால் 2 கிராம் தங்கமும் அத்துடன் 40 கிராம் வெள்ளி நாணயம் வெள்ளி பாத்திரங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என அறிவித்து ஏராளமான மக்களிடம் பணம் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

தற்போது அவர் காணாமல் போனதால் மக்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon