லிப்டில் சிக்கி தவித்த பெண் துப்புரவு பணியாளர் ..!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீர் என நின்ற லிப்டில் சிக்கி தவித்த பெண் துப்புரவு பணியாளர் பத்திரமாக மீட்கப்பட்டார். ஜானகி என்பவர் இந்த மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.

 

பணியை முடித்துவிட்டு மூன்றாம் தளத்தில் இருந்து இரண்டாம் தளத்தில் வந்த பொழுது லிப்டின் கதவு திடீரென திறக்க முடியாமல் நின்றது. லிஃப்டில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஒரு மணிநேரம் பரிதவித்தனர். உடன் பணியாற்றுவோர் இரும்பு கதவை பைப்பால் உடைத்து ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.