--- --:--:-- --

காய்ச்சல் காரணமாக 200 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி..!

8

புதுச்சேரியில் காய்ச்சல் காரணமாக 200 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அண்மை காலமாக காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் மக்கள் முக கவசம் அணிய வேண்டுமென்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் மேலும் 200 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 180 குழந்தைகளும் காரைக்காலில் 20 குழந்தைகளும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon