--- --:--:-- --

செல்போன் வாங்கி தராததால் பள்ளி மாணவர் கொசு மருந்தை குடித்து தற்கொலை..!

10

சங்கரன் கோயிலில் செல்போன் வாங்கி தராததால் பள்ளி மாணவர் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் செல்போன் வாங்கித் தரும்படி பெற்றோரிடம் கேட்டுள்ளார்.

 

அதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த மாணவர் வீட்டிலிருந்து கொசு மருந்தை கொடுத்துவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளிக்குச் செல்லும் வழியில் மயங்கி கிடந்த மாணவன் பள்ளி மாணவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon