--- --:--:-- --

வாயில் ஆசிட் ஊற்றி சிறுமியை கொலை செய்ய முயன்ற தாய் மாமன்..!

7

ஆந்திர மாநிலம் நெல்லூரில் வாயில் ஆசிட் ஊற்றி சிறுமியை கொலை செய்ய முயன்ற தாய்மாமனை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் நகரில் உள்ள நரிக்குறவர் காலனியில் வசித்து வரும் தம்பதியின் 14 வயது மகள் பள்ளியில் படித்து வருகிறார்.

 

வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை வீட்டில் தனியாக இருந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்த நிலையில் சிறுமியின் தாய்மாமன் சிறுமியிடம் அத்துமீறி உள்ளார்.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கழிவறைக்கு சென்று கதவை மூட முயன்ற பொழுது கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற நாகராஜ் கத்தியைக் கொண்டு சிறுமியின் கழுத்தை அறுத்தது மட்டுமின்றி வாயில் ஆசிட் ஊற்றி உள்ளார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon