துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி..!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பூங்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பார்க்கில் நேற்று மாலை 4 மணியளவில் இரண்டு கும்பல்கள் இடையே நடந்த மோதலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதில் 2 பேர் பலியானதுடன் மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




