--- --:--:-- --

மெரினாவில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்த 4 பேர் கைது..!

10

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக மெரினாவில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளகுறிச்சி தனியார் பள்ளி மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு சென்னை மெரினாவில் 2500 பேர் கூட இருந்தாக வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவியது.

 

இதன் காரணமாக நேற்று இரவு முதல் நேப்பியர் பாலம் வரை கலங்கரை விளக்கம் வரை 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

 

இந்த விவகாரத்தில் ஸ்ட்ரைக் பார் ஸ்ரீமதி என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஆரம்பித்து தகவலை பதிவு செய்வதற்காக 17 வயது சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த 4 பேரும் வாட்ஸ்அப் குழு மூலமாக மெரினா கடற்கரைக்கு அழைப்பு விடுத்தது போலீசார் விசாரணையில் உறுதியானது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon