--- --:--:-- --

தாலிச் சங்கிலியை கழற்றுவது கணவர்களுக்கு அளிக்கும் மன ரீதியான துன்புறுத்தல்..!

10

விவாகரத்து ஆகாமல் கணவரை பிரிந்து வாழும் மனைவி தாலிச் சங்கிலியை கழற்றுவது கணவர்களுக்கு அளிக்கும் மன ரீதியான துன்புறுத்தல் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

விவாகரத்து தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேலுமணி மற்றும் சௌந்தர் அமர்வு பணியிடத்திற்கு சென்று கணவரை பற்றி அவதூறு பரப்பியது மனரீதியாக துன்புறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வழக்கு விசாரணையின்போது கணவரை பிரிந்து விட்டதால் மனைவி தாலியை கழற்றுவது கணவர்களுக்கு கொடுக்கும் மனரீதியான துன்புறுத்தல் என தெரிவித்தனர்.

 

உயிருள்ளவரை பெண்கள் தாலியை அணிந்திருக்கும் நிலையில் அவரை பிரிந்து தாலிச் சங்கிலியை கழற்றுவது சம்பிரதாயமற்ற செயல் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon