--- --:--:-- --

தகாத உறவை தட்டிக்கேட்ட கணவர் மீது ஆசிட் வீசிய சம்பவம்..!

9

ஆம்பூர் அருகே தகாத உறவை தட்டிக்கேட்ட கணவர் மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் ராமன். கூலித் தொழிலாளியான இவருக்கும், ஆம்பூரை சேர்ந்த வேலு என்பவருக்கும் திருமணம் நடந்து கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர்.

 

ராணிப்பேட்டையை சேர்ந்த ஜேசிபி ஓட்டுனர் சக்திவேல் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவால் மாறியுள்ளது. இதனை அறிந்த கணவர் ராமன் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளார்.

 

இதனால் கோபமடைந்த சக்திவேல் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து ராமர் மீது வீசினார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கு பதிவு செய்த போலீசார் சக்திவேலை கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon