--- --:--:-- --

செல்போனில் சிக்கிய மின்னல் தாக்கும் பிரத்யேக வீடியோ..!

7

இடி, மின்னல் என்றாலே பலருக்கும் பயம்தான். இதன் காரணமாகவே வானத்தில் மின்னலை பார்க்கும் போதெல்லாம் நாம் விழிப்புடன் இருப்போம். அந்த சமயத்தில் சாலைகளில் செல்பவர்கள் அல்லது திறந்த வெளியில் இருப்பவர்கள் இதுபோன்ற தருணத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அருகே இருக்கும் மரத்தின் அடியில் நின்று கொள்வார்கள்.

 

இந்த வீடியோவை பார்த்த பிறகு இது எந்தளவு ஆபத்து என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஒரு வீடியோவில் காரில் இருந்தபடி நபரொருவர் மழை வரும் நேரத்தில் வெளியே வீடியோ ஒன்றை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

 

ஒரு கட்டத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆக்ரோஷமாய் வானில் தோன்றிய மின்னல் வெளியே இருந்த மரத்தின் மீது பாய்கிறது. பார்க்கும்போது இதயத்தை பதறவைக்கும் இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon